2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள நடிகர் திலீப், மோகன்லால், மம்முட்டியை போல அதிரடி காட்டாமல் குடும்பப் பாங்கான ரசிகர்களை கவரும் விதமாக ஆக்சன், சென்டிமென்ட், காமெடி என எல்லாம் கலந்து நடிக்க கூடியவர். அப்படிப்பட்டவருக்கு கடந்த சில வருடங்களாகவே ஒரு பக்கம் நடிகை கடத்தல் வழக்கு காரணமாக சிக்கல் என்றால் இன்னொரு பக்கம் அவரது படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருவது அவருக்கு இன்னொரு மிகப்பெரிய துயரம். கடந்த 2019ம் ஆண்டு வெளியான கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல் என்கிற ஹிட் படத்திற்கு அடுத்ததாக இந்த ஐந்து வருடங்களில் சரிவைத்தான் சந்தித்து வருகிறார். இதில் ஆக்சன், காமெடி என எல்லா படங்களும் அடங்கும்.
இந்த நிலையில் தற்போது 'பா பா பா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் திலீப். இயக்குனர் தனஞ்செய் சங்கர் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆச்சரியமான விஷயமாக 'ஒரு அடார் லவ்' படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்த நூரின் ஷெரிப் மற்றும் அவரது கணவரும் நடிகருமான பாஹிம் ஷபார் இருவரும் சேர்ந்து இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். இன்னொரு ஆச்சரியம் தமிழ் நடிகர்களான ரெடின் கிங்ஸ்லி மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது ஆக்சன் படமாக உருவாகி வருகிறது என்பது புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது நன்றாகவே தெரிகிறது.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த போஸ்டரில் ஒரு ஜிப்ஸி வாகனத்தின் மீது திலீப் அமர்ந்துள்ளார். அந்த வாகனத்தின் எண் டிஎன் 59 100. எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறதா ? ஆம் விஜய் நடித்த கில்லி படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெற்ற ஜிப்ஸி வண்டியின் நம்பரும் இதுதான். இந்த நம்பரை திலீப் பயன்படுத்தும் ஜிப்ஸிக்கு எதற்காக வைத்தார்கள் ? ஒருவேளை கில்லி படத்துடன் ஏதாவது தொடர்பு படுத்துகிறார்களா என பல ஆச்சரிய கேள்விகளை இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்படுத்தி உள்ளது.