புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் இணையாக வளர்ந்து வந்தவர் தான் நடிகர் சுரேஷ்கோபி. குறிப்பாக ஆக்ஷன் படங்களாக நடித்து ஆக்ஷன் ரசிகர்களின் மிகப்பெரிய வட்டத்தை பெற்றிருந்தார். சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இறங்கி தேசிய கட்சியான பாஜகவில் சேர்ந்தார். சில ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தார்.
2024ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் எம்பி ஆக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அவருக்கு பெட்ரோலியம் எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே துறை சார்ந்த பணிகளை கவனித்து வந்த அவர் தான் ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துக் கொடுப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.
சமீபத்தில் தான் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் கடந்த 2020லேயே அவர் நடிப்பதாக துவங்கப்பட்டு கொரோனா தாக்கம், கதை பிரச்னை, சுரேஷ் கோபியின் அரசியல் பயணம் என பல காரணங்களால் நின்று போயிருந்த ஒத்தக்கொம்பன் திரைப்படம் தற்போது படப்பிடிப்பை துவங்கியுள்ளது. மத்திய அமைச்சரான பிறகு நீண்ட நாட்கள் கழித்து சுரேஷ்கோபி. இந்த படத்தில் நடிப்பதற்காக முதன்முறையாக நேற்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தை மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார்.