விடாமுயற்சி பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி களம் இறங்குகிறதா? | சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது! | 200 கோடி லாபத்தை நெருங்கும் 'புஷ்பா 2' | சிறு பட்ஜெட் படங்கள் தான் வாழ்வியலை பேசும்: சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார் | தமிழ் படத்தில் லண்டன் நடிகை | மீண்டும் வருகிறார் 'ஆரண்ய காண்டம்' யாஸ்மின் பொன்னப்பா | வணங்கானில் உண்மை சம்பவம்: பாலா | பிளாஷ்பேக்: இரண்டு ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்ட 'ராஜபார்வை' | பிளாஸ்பேக்: தயாரிப்பாளர் மீது வினோத வழக்கு தொடர்ந்த நடிகை | பென்ஸ் படத்தில் இடம்பெறும் 8 பாடல்கள் |
நடிகர் துல்கர் சல்மான் நடிக்க துவங்கிய புதிதில் அவர் நடித்த முதல் படமே ஆக்சன் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த 'உஸ்தாத் ஹோட்டல்' திரைப்படம் அவரை பெண்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக குடும்பப் பாங்கான கதை அம்சமாக அமைந்ததுடன் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. அன்வர் ரஷீத் இயக்கிய இந்த படத்திற்கு 'பெங்களூர் டேஸ்' புகழ் இயக்குநர் அஞ்சலி மேனன் கதை எழுதியிருந்தார். தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தையும் ஒரு இளைஞனுக்கு அவன் எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது. 2012ல் இந்தப்படம் வெளியானது.
இந்த நிலையில் தற்போது 12 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 3ம் தேதி கேரளாவில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான அன்வர் ரஷீத். இது இப்போது இருக்கும் துல்கர் ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பது ஒரு காரணம் என்றால், சமீபத்தில் வெளியான அவரது 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் நன்றாக ஓடி இருப்பதால் இப்போது இந்த 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தை வெளியிட்டால் நல்ல வசூல் பார்க்கலாம் என்பதும் இன்னொரு காரணம் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.