குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தமிழ் படங்களின் கதைகள் வடநாட்டில் நடந்தாலும் அங்கும் தமிழ் பாடல்கள்தான் வைக்கப்படும். ஆனால் எல்லாமும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மகேந்திரன் தனது 'நண்டு' படத்தில் இரண்டு ஹிந்தி பாடல்களை வைத்தார். படத்தின் கதைப்படி நாயகன் லக்னோவை சேர்ந்தவர். அவரது குடும்பம் அங்கு பெரிய பணக்கார குடும்பம், ஆனால் நாயகனுக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் அந்த குடும்பமே அவரை புறக்கணிக்கிறது. அதனால் மனம் வெறுத்து ஆறுதலுக்காக சென்னை வரும் நாயகன் இங்கு அஸ்வினியை காதலித்து திருமணம் செய்வது மாதிரியான கதை.
நாயகனின் குடும்ப சூழலை காட்டும் காட்சிகள் லக்னோவிலேயே படமாக்கப்பட்டது. 'கெய்சே கஹோன்...', 'ஹம் ஹய் அகிலே..' என தொடங்கும் இரண்டு ஹிந்தி பாடல்கள் இடம் பெற்றது. இரண்டுமே சூப்பர் ஹிட்டானது. 'அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா...' பாடல் தமிழில் ஹிட் ஆனது. இளையராஜா இசை அமைத்திருந்தார். சிவசங்கரி எழுதிய நாவல் அந்த பெயரிலேயே படமானது. ஆனால் படம் தோல்வி அடைந்தது.