வருண் தவானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியின் புதிய பட பணிகள் துவங்கின | ‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார் | திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் |
நடிகர் ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளை இரண்டு தினங்களுக்கு முன்பு கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.
அவர்களுக்கு தனித்தனியாக நன்றி சொல்லி வருகிறார் ரஜினிகாந்த். அதே சமயம் மொத்தமா ஒரு நன்றிக் கடிதம் ஒன்றையும் நேற்று வெளியிட்டிருந்தார். அதில் முதலில் அரசியல் பிரபலங்களையும், அடுத்து சினிமா பிரபலங்களையும் தனித்தனியே குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யை அரசியல்வாதிகள் பட்டியலில் சேர்த்து, “அன்புத்தம்பி விஜய்” என்றும், அரசியல்வாதியாகவும் இருக்கும் நடிகர் கமல்ஹாசனை, “திரையுலகத்திலிருந்து நண்பர் கமல்ஹாசன்,” என்றும் குறிப்பிட்டுள்ளது கமல் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் ஏற்கெனவே சட்டசபைத் தேர்தலை சந்தித்தவர். ஆனால், கட்சி ஆரம்பித்து இன்னும் தேர்தலில் போட்டியிடாதவர் விஜய். அப்படியிருக்க, கமல்ஹாசனை நடிகராகவும், விஜய்யை அரசியல்வாதியாகவும் குறிப்பிட்டதற்கு ரஜினிக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புப் பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.
மேலும், கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லாத போது, ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு மட்டும் கமல்ஹாசன் வாழ்த்து சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளார்கள்.