பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகை ஆனார். அங்குள்ள மிகப்பெரிய சினிமா குடும்பமான அக்னினேனி நாகேஸ்வரராவ் குடும்பத்து மருமகள் ஆனார். நாகேஸ்வரராவின் பேரனும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். விவாகரத்தும் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால் அடுத்து சமந்தாவின் திருமணம் எப்போது என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதை மறைமுக உணர்த்தி ஜோதிட வடிவில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “2025-ல் ரிஷபம், கன்னி, மகர ராசியினர் இவற்றை பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று ராசிகாரர்களும் அடுத்த வருடம் பிசியாக இருப்பார்கள், தொழில் ரீதியாக முன்னேறுவார்கள். நிறைய பணம் சம்பாதிப்பார்கள். இன்னும் நம்பிக்கையுடன் காதலை அளிக்கும் துணைவரை பெறுவார்கள். குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். லட்சியங்களை அடைவார்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்வார்கள். மேலும் பல வாய்ப்புகளை பெறுவார்கள். உடல் ரீதியாகவும் பலமாக இருப்பார்கள். இதில் இருப்பவையெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
சமந்தா ரிஷப ராசிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.