வருண் தவானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியின் புதிய பட பணிகள் துவங்கின | ‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார் | திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் |
ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணியில் இருக்கும் கதாநாயகியர் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். எங்கே தங்களது சினிமா வாழ்க்கை பாதிக்கப்படுமோ என திருமணத்தை தள்ளி வைப்பார்கள். திருமணம் செய்து கொண்டாலே கதாநாயகி என்ற அந்தஸ்து போய்விடும். அதற்குப் பின் அக்கா, அண்ணி வேடங்களல் மட்டுமே நடிக்க அழைப்பதும் அதற்குக் காரணமாக இருந்தது.
ஆனால், கடந்த சில வருடங்களில் முன்னணியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் களம் இறங்கிய சில கதாநாயகியரைப் பார்த்துவிட்டோம். அந்தக் காலம் போல இந்தக் காலத்தில் திருமணம் என்பது அவர்களது சினிமா வாழ்க்கைக்குத் தடையாக இல்லாமல் போய்விட்டது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் சமந்தா. திருமணம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து தொடர்ந்து நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கணவரைப் பிரிந்தாலும் அவரது திரையுலக வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
'நேரம், ராஜாராணி' ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகை நஸ்ரியா தமிழிலும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார். ஆனால், முன்னணியில் இருந்த போதே நடிகர் பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டார். சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார்.
தமிழில் விஜய்யுடன் 'தலைவா', விக்ரமுடன் 'தெய்வத் திருமகள்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அமலா பால் முன்னணி நடிகையாக இருந்த போதே இயக்குனர் விஜய்யைத் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் விவாகரத்து பெற்றாலும் அடுத்து வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுவிட்டார். தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
'காதல் கொண்டேன், கோவில், 7ஜி ரெயின்போ காலனி' என 2000ம் ஆண்டின் துவக்கத்தில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட கதாநாயகியாக இருந்தவர் சோனியா அகர்வால். முன்னணியில் இருந்த போதே இயக்குனர் செல்வராகவனைக் கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பிரிந்தாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
'வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான்' என சில வருடங்களுக்கு முன்பு முன்னணிக்கு முன்னேறிக் கொண்டிருந்த நடிகையாக இருந்தார் சாயிஷா. ஆனால், நடிகர் ஆர்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே கவுதம் கிச்சுலுவை என்பவரை திருமணம் செய்தார் நடிகை காஜல் அகர்வால். குழந்தை பிறந்த பின் கொஞ்சகாலம் சினிமாவிற்கு பிரேக் விட்டவர் மீண்டும் நடித்து வருகிறார்.
இப்படி முன்னணியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்ட நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவருடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபலமானவர் அடுத்து ஹிந்தி அறிமுகப் படமான 'பேபி ஜான்' படத்திற்காகக் காத்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் கீர்த்தி நடிப்பைத் தொடர்வார் என்பதில் சந்தேகமில்லை.