எனக்கு பிடித்த பிரபாஸ்: மாளவிகா மோகனன் | அமரன் படத்தை கமல் தயாரிப்பதற்கு காரணமான இயக்குனர் விஷ்ணுவர்தன்! | ‛படைத்தலைவன்' படத்துக்காக இளையராஜா இசையமைத்து எழுதிய பாடல் வெளியானது! | மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினி? | சந்தீப் கிஷனிடம் 50 நிமிடம் கதை சொன்ன ஜேசன் சஞ்சய்! | ரூ.10 கோடி சம்பளமா? ராஷ்மிகா விளக்கம் | சூர்யா 45 படத்தில் இணைந்த நட்ராஜ்! | வாய்ப்புகள் வந்தது எப்படி?: ஜெயித்த ஜனனிதுர்கா | கேரள நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனரால் ‛அப்செட்' ஆன மும்பை நடிகை | விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ! |
பெரும்பாலும் சினிமாவில் நடிகர்களின் மகன்கள் நடிகர்களாக மாறும் வரிசையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் தனது தாத்தா வழியில் டைரக்ஷன் துறையை தேர்ந்தெடுத்துள்ளார். இதற்காக வெளிநாட்டுக்கு எல்லாம் சென்று படித்து வந்துள்ளார். வீட்டிலேயே ஒரு ஹீரோ இருந்தாலும் கூட படிப்படியாக தான் முன்னேற வேண்டும் என்று நினைத்த ஜேசன் சஞ்சய்க்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தது லைக்கா நிறுவனம். கடந்த ஒரு வருடமாகவே இது வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார் என்றும் மற்றும் தமன் இசையமைக்கிறார் என்பது உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் என்பதால் அந்த செல்வாக்கை பயன்படுத்தி பெரிய ஹீரோக்களை தேடிப் போவார் என நினைத்தபோது அவர் சந்தீப் கிஷனை தேர்ந்தெடுத்தது ஆச்சரியம் தான். அதே சமயம் இன்று தமிழ் சினிமாவில் முதல் மூன்று இடங்களில் உள்ள இயக்குனர்களில் ஒருவராக, அனைத்து ஹீரோக்களாலும் விரும்பப்படும் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தான் முதலில் இயக்குனராக அறிமுகம் ஆகிய மாநகரம் படத்தில் சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து தான் படம் இயக்கினார். அந்த வகையில் தற்போது ஜேசன் சஞ்சையும் தனது முதல் படத்திற்கு சந்தீப்பை தேர்ந்தெடுத்து இருப்பதால் லோகேஷ் கனகராஜுக்கு ஒர்க் அவுட் ஆன ராசி இவருக்கும் வொர்க் அவுட் ஆகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.