விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் | ‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் | திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! | ‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் | அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் தேதி இதோ |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தந்தையை போல் நடிகர் ஆகாமல் தாத்தா எஸ்.ஏ சந்திரசேகர் வழியில் இயக்குனராக களமிறங்கி உள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கிய இவர் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட சென்னையில் தொடங்கி அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கை, பேங்காக் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




