ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
பாலிவுட் படங்கள், ஹிந்தி வெப் தொடர்களில் துணிச்சலான பல கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர் டி.ஜே.பானு. தமிழில் காதலிக்க நேரமில்லை, டாங்கே, வாழ், போர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் இலங்கை தமிழர்கள் உருவாக்கும் 'அந்தோனி' என்ற படத்தில் நடித்துள்ளார். கயல் வின்சன்ட் நாயகனாக நடிக்க, சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்குகின்றனர்.
படத்தில் அருள்தாஸ், நிழல்கள் ரவி ஆகியோருடன் இலங்கையை சேர்ந்த நடிகர் சுதர்சன் ரவீந்திரன் மற்றும் நடிகை சவுமி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், இதயராஜ், யசிதரன், தர்ஷிபிரியா, ஷாமிலா, சாந்தா, சர்மிளா, வசந்த சீலன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இலங்கை - யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு தொடங்கி நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. படம் குறித்து இயக்குனர்கள் கூறும்போது, "இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு தனித்தன்மை கொண்ட எமது மண் சார்ந்த சினிமாவை எடுத்து காட்டுகின்ற திரைப்படமாக இந்த அந்தோனி அமையும் என்பதால், இத்திரைப்படம் ஐரோப்பிய அளவில் உலகத்தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கின்றது" என்றனர்.