ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடாவுக்கு முன் ஜாமீன் | நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் சிறை செல்ல காரணமாக இருந்த இயக்குநர் மரணம் | விக்ரம் 63வது படத்தின் அறிவிப்பு வெளியானது | சினிமா வேறு, குடும்ப வாழ்க்கை வேறு… : நிரூபித்த நடிகைகள் | 2வது திருமணம் பற்றி சூசமாக தகவல் வெளியிட்ட சமந்தா | சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ? | சினிமா விருது தேர்வு நடந்து வருகிறது : சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் | தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின் | பிளாஷ்பேக் : லட்சுமி பிறந்தநாள் - தலைமுறைகளை தாண்டிய நடிகை |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். இந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி போட்டியிட்ட இடங்கள் அனைத்திலும் வென்றது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வென்றது. பவன் கல்யாண் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த ஆறு மாதங்களாக அரசுப் பணியில் பிஸியாக இருந்து வருகிறார் பவன் கல்யாண்.
தேர்தலுக்கு முன்பாக அவர் நடித்து வந்த “ஓஜி, ஹரிஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங்” ஆகிய படங்களின் படப்பிடிப்பு அதனால் தடைபட்டது. இந்நிலையில் இன்று முதல் 'ஹரிஹர வீர மல்லு' படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அவரது வசதிக்காக விசாகப்பட்டிணத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் சில நாட்கள் வந்து நடித்த பவன் கல்யாண், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இப்படத்தை தமிழில் “எனக்கு 20 உனக்கு 18, கேடி,' ஆகிய படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணா இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மகன் இவர். தெலுங்கில் 'ஆக்சிஜன், ரூல்ஸ் ரஞ்சான்' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் ஜோதிகிருஷ்ணா.
கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் மாற்றம், கொரோனா தாக்கம், பவன் கல்யாணின் அரசியல் வேலைகள் என பல காரணங்களால் தடைபட்டது.