'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் | நான்காவது வாரத்தை கடந்து நான்-ஸ்டாப் ஆக ஓடும் 'அமரன்' | புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் |
மலையாளத்தில் கடந்த நவம்பர் 22ம் தேதி 'டர்க்கீஸ் தர்க்கம்' என்கிற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. துல்கர் சல்மானின் நண்பரும் அவருடன் இணைந்து திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் அவருடன் இணைந்து நடித்தவருமான நடிகர் சன்னி வெய்ன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ராஜூ முருகன் இயக்கிய 'ஜிப்ஸி' படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
டர்க்கீஸ் மசூதியில் எரிக்கப்பட்ட ஒரு பிரேதம் ஒன்றை மையப்படுத்தியும் அதை சுற்றி நடக்கும் பிரச்னைகளையும் வைத்து இந்த படத்தின் கதை உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறிப்பிட்ட ஒரு மதத்தினரை புண்படுத்தும் விதமாக திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி ஒரு தகவல் கேரளாவில் வேகமாக பரவியது. இத்தனைக்கும் இந்த படத்தை நமாஸ் சுல்தான் என்கிற இஸ்லாமியர் தான் இயக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பால் கேரளாவில் இந்த படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இது குறித்து கூறும்போது, ''இந்த படத்திற்கு எதிராக ஒரு சில கும்பல் வேண்டும் என்றே திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். சர்ச்சையான எந்த கருத்துக்களையும் இந்த படத்தில் நாங்கள் சொல்லவில்லை. அதேசமயம் மக்கள் இந்த படத்தில் எந்தவித சர்ச்சை கருத்துக்களும் இல்லை என்று புரிந்து கொள்ளும்போது மீண்டும் இந்த படத்தை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்வோம்,'' என்றும் கூறியுள்ளனர்.