பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி | தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா... | இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 31ம் தேதி திரைக்கு வந்த படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று 300 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தை சேர்ந்த அதிகாரிகள், சிவகார்த்திகேயனை அழைத்து கவுரவித்துள்ளார்கள். அதோடு, மேஜர் முகுந்த் வரதராஜனாகவே அமரன் படத்தில் அவர் வாழ்ந்திருப்பதாக வாழ்த்தி பாராட்டி உள்ளார்கள். இந்த தகவலை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
