பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44வது படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் காதல் கதையில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த படத்திற்கு பல தலைப்புகளை ஆலோசித்து வந்த கார்த்திக் சுப்பராஜ், தற்போது 'கல்ட்' என்று டைட்டில் வைக்க முடிவெடுத்து இருக்கிறார்.
ஆனால் இதே டைட்டிலை நடிகர் அதர்வா தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதால் அந்த டைட்டில் சம்பந்தமாக அவரிடத்தில் கார்த்தி சுப்பராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதனால் அவர் சம்மதம் தெரிவித்தால், சூர்யா 44வது படத்திற்கு 'கல்ட்' என்ற டைட்டிலை வைத்து விடுவார்கள் என்பது தெரிய வந்துள்ளது.