விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
தெலுங்கு திரையுலகில் நுழைந்து சில வருடங்களே ஆன நிலையில் இளம் வயதிலேயே முன்னணி கதாநாயகியாக வளர்ந்து விட்டவர் நடிகை ஸ்ரீ லீலா. குறிப்பாக இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் இடம் பெற்ற குர்ச்சி மடத்தப்பெட்டி என்கிற பாடலுக்கு அவர் போட்ட அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த ஆட்டம் தான் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் என்கிற ஒரு பாடலுக்கு மிகப்பெரிய ஊதியத்துடன் நடனமாடும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது.
எப்படி புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி ரசிகர்களை வசியப்படுத்தினாரோ அதேபோல இந்த பாடலின் மூலம் ஸ்ரீ லீலாவும் அப்படி ஒரு வாய்ப்பை பெறுவார் என்றே தெரிகிறது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீ லீலா வாரணாசிக்கு சென்று அங்கு கங்கை நதியில் வழிபட்டு தனது பிரார்த்தனைகளை செலுத்தியுள்ளார். அவருடன் அவரது தாயாரும் சென்றிருந்தார். வாரணாசி கோவிலில் அவர் வழிபடும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.