ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் கேம் சேஞ்சர். ராஜமவுலியின் இயக்கத்தில் மகதீரா, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களில் நடித்த ராம்சரணுக்கு மீண்டும் அதற்கு இணையான எதிர்பார்ப்பு இந்த படத்திலும் ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக கியாரா அத்வானி, அஞ்சலி நடிக்க முக்கிய வேடத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக இந்தப் படத்தின் முக்கியமான இரண்டு காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் எஸ் ஜே சூர்யா.
அதில் ஒன்று ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள காட்சி. இன்னொன்று நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடித்த காட்சி. இந்த காட்சிகளுக்கு டப்பிங் பேசிய எஸ்.ஜே சூர்யா நிச்சயமாக படத்தில் இவை கைதட்டலை அள்ள போகின்றன என்று தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் படம் வெளியாக இருக்கும் இந்த சங்கராந்தி பண்டிகை நிச்சயமாக 'ஷங்கரா'ந்தி ஆகத்தான் இருக்கப் போகிறது என்றும் இயக்குனர் ஷங்கரை புகழ்ந்துள்ளார் எஸ் ஜே சூர்யா.