விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள கங்குவா படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இப்படம் 2000 கோடி வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிவந்த நிலையில் தற்போது 200 கோடியாவது வசூலிக்குமா என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இப்படியான நிலையில் அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 44 வது படமாவது வெற்றி பெற்று சூர்யாவின் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளுமா? என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.
மேலும், இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானபோது இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு கார்த்தி சுப்பராஜ் இது கேங்ஸ்டர் படமில்லை என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது சூர்யா 44வது படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே கூறுகையில், சூர்யா 44வது படம் கேங்ஸ்டர் படமில்லை. வித்தியாசமான காதல் கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் எனக்கும் சூர்யாவுக்குமிடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தில் எனக்கான ரோல் முக்கியமானதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.