லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது திருமண சர்ச்சைகளிலும் சிக்கிக் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டில் இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷ் டேட்டிங் செய்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு வதந்தி பரவியது. அதற்கும் கீர்த்தி சுரேஷின் தந்தை மறுப்பு செய்தி வெளியிட்டிருந்தார்.
தற்போது இந்த ஆண்டு டிசம்பரில் கீர்த்தி சுரேஷ் தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், இது அவரது பெற்றோர் நிச்சயித்த திருமணம் என்றும் தற்போது ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையானதா? இல்லை இதுவும் வழக்கம்போல் வதந்தி தானா? என்பது கீர்த்தி சுரேஷ் தரப்பு விளக்கம் கொடுக்கும்போது தெரியவரும்.