ரகசியமாக 2வது திருமணம் செய்த இயக்குனர் கிரிஷ் | கங்குவாவுடன் மோதும் கிளாடியேட்டர் | மாளவிகா மேனனுக்கு 'போன் டார்ச்சர்' கொடுத்த இளைஞர் கைது | தமிழில் முதல் பான் இந்தியா வரவேற்பைப் பெறுமா 'கங்குவா' | பிளாஷ்பேக்: முதன் முதலில் காடுகளில் படமான 'வனராஜ கார்ஸன்' | விஜய்சேதுபதி மகன் பட வெளியீடு தள்ளிவைப்பு | பிளாஷ்பேக்: ஒரே நடிகைக்கு 150 பாடல்கள் பாடிய பி.சுசீலா | ரங்கன் தாதா கதாபத்திரத்தில் நடிக்க விரும்பும் சூர்யா | மோகன்லாலுக்கே தெரியாத அவரது செல்லப்பெயரை கூறிய மனைவி | நடிகர் சித்திக்கிற்கு இடைக்கால ஜாமினை நீட்டித்த உச்ச நீதிமன்றம் |
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் அவரது இல்லத்தில் நேற்றிரவு (நவ.,9) காலமானார். அவருக்கு வயது 80. வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
1976ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‛பட்டினப்பிரவேசம்' திரைப்படத்தில் அறிமுகமான டெல்லி கணேஷ், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, விஜய், அஜித் என, இப்போது உள்ள இளம் நடிகர்களின் படங்கள் வரை இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் சேர்த்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை, ராமபுரம் வீட்டில், பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது.
இவரது உடலுக்கு இயக்குனர்கள் சந்தான பாரதி, லிங்குசாமி, வெற்றிமாறன், நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, ஸ்ரீமான், செந்தில், ராதாரவி, ரமேஷ் கண்ணா, மன்சூர் அலிகான், சித்ரா லட்சுமணன், மணிகண்டன், சார்லி, சத்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவரும் நடிகருமான விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
நாளை இறுதிச்சடங்கு
டெல்லி கணேஷின் இறுதிச்சடங்கு நாளை (நவ.,11) காலை 10 முதல் 11 மணிக்குள் நடக்கும் என உறவினர்கள் தெரிவித்தனர்.