புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்கு பாடல்கள் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகள் தான் பெரும் பலம் ஆக அமைந்தது. இதேபோல் புஷ்பா 2ம் பாகத்திற்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு திட்டமிட்டு வெளியிட்டுள்ளனர். அதன்படி, புஷ்பா 2 டிரைலர் வருகின்ற நவம்பர் 17ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த டிரைலர் நிகழ்ச்சி பாட்னாவில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து கோல்கட்டா, சென்னை, கொச்சி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.