புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‛அமரன்'. இந்த படம் எப்படி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றதோ அதேபோன்று ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் காரணமாக சோசியல் மீடியாவில் ஜி.வி. பிரகாசுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
இப்படியான நிலையில், அமரன் பட நாயகனான சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஒரு காஸ்ட்லியான வாட்சை பரிசாக வழங்கியிருக்கிறார். இது குறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் ஜி. வி .பிரகாஷ் குமார். இதே போல்தான் விக்ரம் படம் வெற்றி பெற்றபோதும், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை கமல்ஹாசன் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.