புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது.
இந்த படம் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களில் அதிகமாக வசூலித்த படமாக அமரன் அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
லக்கி பாஸ்கர்
வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் ' லக்கி பாஸ்கர்'. வங்கி பண மோசடி, ஸ்டாக் மார்க்கெட் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இப்பம் உருவாகியிருந்தது. இத்திரைப்படம் வெளிவந்த 9 நாட்களில் உலகளவில் ரூ. 77 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் தமிழ் பதிப்பு மட்டும் ரூ. 10 கோடி வசூலை நெருங்கியுள்ளது என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.