‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” |
பொன்னியின் செல்வனுக்கு பிறகு விஜய்யின் லியோ, கோட் போன்ற படங்களில் நடித்த திரிஷா தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, மணிரத்னத்தின் தக்லைப் போன்ற படங்களில் நடிப்பதோடு, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா உள்பட 2 மலையாள படத்திலும் நடிக்கிறார்.
இப்படி பிஸியாக பல மொழிகளிலும் நடித்து வரும் திரிஷா, அடுத்தபடியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். தற்போது பிரபாஸ் நடித்து வரும் ராஜா ஷாப் படத்திற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஏற்கனவே பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கில் பவுர்ணமி, புஜ்ஜி காடு போன்ற படங்களில் திரிஷா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.