ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை |
தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 10ம் தேதி வெளியான படம் 'வேட்டையன்'. சுமாரான வெற்றி, வரவேற்புடன் தியேட்டர்களில் ஓடிய இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
படத்தின் கதையம்சம் சிறப்பாக இருந்தது என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் ரஜினிகாந்த்தின் முழுமையான படமாக இல்லை என்ற குறையும் இருந்தது. இருப்பினும் ஓடிடி தளத்தில் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம். அப்படி ஒரு வரவேற்பு இந்தப் படத்திற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 10ம் தேதி வெளியான 'வேட்டையன்' படம் நான்கே வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. ஆனாலும், ரஜினிகாந்த் முக்கிய தோற்றத்தில் நடித்து பிப்ரவரி 9ம் தேதி வெளியான 'லால் சலாம்' படம் ஒன்பது மாதங்களாகியும் இன்னும் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் உள்ளது.
செப்டம்பர் மாதமே இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது 'ஹார்ட் டிஸ்க்'ல் காணாமல் போன காட்சிகளைத் தேடி எடுத்துவிட்டதாகவும், அவற்றுடன் சேர்த்து புதிதாக எடிட் செய்யப்பட்ட படமாக ஓடிடியில் வரும் என்றும் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனாலும் அதன்பின் அது குறித்த அப்டேட் எதுவும் இதுவரையிலும் வெளியாகவில்லை.