தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

‛ஜோக்கர்' படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் இன்னும் பிரபலமானார். அதைவிட அவர் வெளியிடும் விதவிதமான போட்டோஷூட்டிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
ரம்யா பாண்டியன் யோகா பயிற்சி மேற்கொண்ட சமயத்தில் பஞ்சாபை சேர்ந்த யோகா மாஸ்டர் லோவல் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலானது. இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் இன்று(நவ., 8) இவர்களின் திருமணம் விமரிசையாக நடந்தது. ரிஷிகேஷில் சிவபுரி என்ற ஊரில் கங்கை நதி பாயும் நதிக்கரையில் இவர்களது திருமணம் தமிழ் முறைப்படி நடந்தது.
இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரம்யா பாண்டியனின் தாய் சாந்தி, சகோதரி திரிபுர சுந்தரி, தம்பி பரசுராமன் ஆகியோருடன் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான நடிகர் அருண் பாண்டியன், இவரது மகளான நடிகை கீர்த்தி பாண்டியன், மருமகனான நடிகர் அசோக் செல்வன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நவ., 15ல் சென்னையில் விமரிசையாக நடைபெற உள்ளது.
ரம்யா பாண்டியன் - லோவலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




