புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
‛ராயன்' படத்திற்கு பின் ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் தனுஷ். இதையடுத்து ‛இட்லி கடை' என்ற மற்றொரு படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 'டாவுன் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இன்று அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.