சூர்யா 45வது படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்! புதிய இசையமைப்பாளர் ஒப்பந்தம்! | விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்! நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு தகவல் | பிளாஷ்பேக்: ரஜினி விரும்பிய கதையில் நடித்த சிவாஜி | புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! |
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 20ம் தேதி வெளியான படம் 'லப்பர் பந்து'.
வியாபார ரீதியாக பெரிய நடிகர்கள் இல்லாத ஒரு படம் அதன் சிறப்பான கதையம்சம், திரைக்கதை, நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இன்று இப்படம் 50வது நாளைத் தொட்டுள்ளது.
விஜய் நடித்த 'தி கோட்' படம் வெளியான இரண்டு வாரங்களில் வந்தது. இந்தப் படம் வெளிவந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இருபது நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படம் வெளிவந்தது. அவ்வளவு பெரிய நடிகர்களின் படங்களுக்கு இடையிலும் இப்படத்திற்கான வரவேற்பு எந்த விதத்திலும் குறையவில்லை.
ஓடிடி தளத்தில் வெளியான பின்னும், கடந்த வாரம் தீபாவளிக்கு சில படங்கள் வெளிவந்த பிறகும் தமிழகம் முழுவதுமே பல தியேட்டர்களில் இப்படம் ஓடி வருகிறது. இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதே சமயம் சுமார் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்த படமாகவும் இருந்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.