அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் | கங்கை நதி கரையில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணம் : யோகா மாஸ்டர் லோவலை மணந்தார் | 5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'அமரன்'. இப்படத்தின் முதல் நாள் வசூலை மட்டும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தற்போது படம் வெளிவந்து ஒரு வாரமாகியும் அதற்கடுத்த வசூல் விவரங்களை வெளியிடவில்லை.
இருப்பினும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இப்படம் குறித்த வசூல் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆந்திராவில் 22 கோடி, கர்நாடகாவில் 11 கோடி, கேரளாவில் 6 கோடி, இதர மாநிலங்களில் 2 கோடி, வெளிநாடுகளில் 52 கோடி என இப்படத்தின் மொத்த வசூல் 193 கோடி வரையிலும் இருக்கலாம் என்கிறார்கள். இந்த வார முடிவில் 200 கோடி வசூலைக் கடந்துவிடும் என்பதும் லேட்டஸ்ட் அப்டேட்.
தமிழகத்தில் மட்டும் 100 கோடி, மொத்தமாக 200 கோடி வசூல் என்பது சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு செல்லும் ஒன்றாகும். இந்த உச்சத்தை சிவகார்த்திகேயன் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தால் நல்லது என கோலிவுட்டினர் தெரிவிக்கிறார்கள்.