இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
மலையாள திரையுலகில் பெண் தயாரிப்பாளர்கள் ரொம்பவே குறைவு. அதிலும் ரசிகர்களால் ஓரளவுக்கு அறியப்பட்டவர்கள் என்றால், சான்ட்ரா தாமஸ் மற்றும் சோபியா பால் இருவரும் தான். இதில் சான்ட்ரா தாமஸ் ஒரு நடிகையும் கூட. இவர் ப்ரைடே பிலிம் ஹவுஸ் என்கிற பெயரில் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். அதே சமயம் அவ்வப்போது திரையுலகினர் குறித்து ஏதாவது பரபரப்பாக பேசி சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு மலையாள திரைகளில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரும் நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கத்தை மையப்படுத்தி தான் பேசி வந்தனர்.
ஆனால் சான்ட்ரா தாமஸ், “தயாரிப்பாளர் சங்கத்திலும் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. பெண்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. சங்கத்தால் நடத்தப்படும் விழாக்களுக்கு கூட அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. இப்போது இருக்கும் தலைமை மாற வேண்டும்” என கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது தலைவராக இருப்பவர் மம்முட்டியின் ஆஸ்தான் நண்பர்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் என்பவர் தான்.
சான்ட்ரா தாமஸின் இந்த விமர்சன பேச்சு குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் விளக்கம் அனுப்பினாலும் அது சங்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லை, சங்கத்தின் செயல்பாடுகளுக்கு களங்கம் விளைவிப்பதாக அவரது பேச்சுக்கள் இருக்கின்றன என்று கூறி சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சான்ட்ரா தாமஸ் மீடியாக்களிடம் கூறும்போது, “அவர்களுக்கு நான் சரியான விளக்கம் கொடுத்திருந்தேன். ஆனாலும் தங்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் யாருமே இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் இப்படி கேள்வி கேட்டால் இதுபோலத்தான் நடக்கும் என மற்றவர்களுக்கு ஒரு மிரட்டல் எச்சரிக்கை விடும் விதமாகத்தான் என்னை தற்போது நீக்கி உள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.