தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
கன்னட சினிமாவில் இயக்குரும், நடிகருமாக இருந்தவர் குரு பிரசாத். 2006ம் ஆண்டு 'மாதா' என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் எட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல், எரடனே சாலா, ரங்கநாயகா உள்பட பல படங்களை இயக்கினார். சில படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரு மதநாயக்கனஹள்ளி அப்பார்ட்மென்ட்டில் வசித்துவந்த நிலையில், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 52 வயதான குரு பிரசாத் சமீபத்தில்தான் 2வது திருமணம் செய்தார். குருபிரசாத் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது அவரது பல படங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது குருபிரசாத்தின் இயக்கத்தில் வெளியான கடைசி படமான 'ரங்கநாயகா' படம் தோல்வியைச் சந்தித்தது ஆகியவைதான் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரது இரண்டாவது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.