டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

ஒரு திரைப்படம் உருவாவதற்கு கதை, திரைக்கதை தாண்டி, தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என அத்தனை நபர்களின் பங்களிப்பு அவசியம். அவர்களுக்கு சம்பளம், உருவாக்கத்திற்கான செலவு அனைத்தும் பட்ஜெட்டாக கணக்கிடுவர். தற்போதைய சூழலில் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு கூட ஓரிரு கோடி செலவாகிறது. அப்படியிருக்கையில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆச்சரியமாக பார்க்கப்படும் 'ஏஐ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு முழு திரைப்படத்தையும் எடுத்துள்ளது வியக்க வைத்துள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த நரசிம்மா மூர்த்தி என்பவர், கிராபிக் டிசைனரான நூதன் என்பவருடன் இணைந்து முழு ஏஐ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். 'லவ் யூ' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில், கதாநாயகன், கதாநாயகி, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படத்தை உருவாக்க மொத்தமே ரூ.10 லட்சம் தான் செலவானதாம். அதுவும் ஏஐ மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழும் வழங்கியுள்ளது. மொத்தம் 12 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. முழு படத்தையும் ஆறே மாதங்களில் உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவின் முதல் ஏஐ திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. உலகளவில் 2024ம் ஆண்டு 'வேர் தி ரோபோட்ஸ் க்ரோ' என்ற ஏஐ திரைப்படம் முதலாவதாக வெளியானது. குறைந்த முதலீட்டில் முழு திரைப்படத்தையும் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளதால், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பல ஏஐ திரைப்படங்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது.