ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள அவரது 69வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தீவிர அரசியலுக்கு இறங்குவதற்கு முன்பாக விஜய்யின் கடைசி படமாக இப்படம் அமைய உள்ளது. அதனால், படத்தின் மீது நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது.
அரசியல் கதையாக, அரசியல் பன்ச் வசனங்கள் உள்ள படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்திற்கான வியாபாரமும் இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 'பார்ஸ் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 75 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.
இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தின் வெளிநாட்டு உரிமையையும் அந்த நிறுவனம்தான் வாங்கியிருந்தது. அதன் விலை சுமார் 70 கோடி வரை இருந்ததாம். தற்போது கூடுதல் தொகையுடன்தான் 'விஜய் 69' உரிமையை வாங்கியுள்ளார்கள். விஜய்யின் கடைசி படம் என்பதால் அத்தொகையை எளிதில் வசூலித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
'விஜய் 69' படத்தின் இதர வெளியீட்டு உரிமைகள் அனைத்துமே அவரது முந்தைய படங்களை விடவும் அதிகமாகவே நடக்கும் என வியாபார வட்டாரங்களில் சொல்கிறார்கள். அதே சமயம், படத்தின் பட்ஜெட்டை அதிகப்படுத்தி விடக் கூடாது என்பதில் தயாரிப்பு நிறுவனமும் மிகவும் உறுதியாக இருககிறது என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது.