மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜனநாயகன்'. இரண்டு தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் தலைப்பு மற்றும், இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. அரசியல் கலந்த கதை என்பது அந்த போஸ்டர்கள் மூலம் உறுதியாகி உள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படத்தின் வியாபாரப் பேச்சு வார்த்தைகளும் ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது. தற்போது படத்தின் வெளிநாட்டு உரிமை பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
சுமார் 75 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாம். அட்வான்ஸ் முறையில் அந்த வியாபாரம் நடைபெற்றுள்ளது என்கிறார்கள். இதற்கு முன்பாக விஜய் நடிப்பில் வெளிவந்த 'லியோ' படத்திற்குப் பிறகு சாதனை விலையில் 'ஜனநாயகன்' படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாம். வெளிநாட்டு உரிமை போலவே தமிழக உரிமை மற்ற மாநில உரிமை வியாபாரமும் அதிக விலைக்கு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.