ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் |
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, 'நான்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு அவ்வப்போது படங்களில் நடித்து வந்த அவருக்கு 'பிச்சைக்காரன்' படம் திருப்புமுனையாக அமைந்தது. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு மட்டும் ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் என 3 படங்கள் ரிலீஸ் ஆகின. அவர் நடித்த 'ககன மார்கன்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், 'அருவி' படத்தை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருடன், படத்தின் டைட்டிலை இன்று (ஜன.,29) படக்குழு அறிவித்துள்ளது. துப்பாக்கி உடன் விஜய் ஆண்டனி உட்கார்ந்திருப்பது போல் இடம்பெற்றுள்ள இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரில் தமிழில் 'சக்தித் திருமகன்' என்றும், ஆங்கிலத்தில் 'பராசக்தி' என்றும் டைட்டில் வைத்துள்ளனர். பர்ஸ்ட்லுக்கை பகிர்ந்த விஜய் ஆண்டனி, 'புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா... இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா..' என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். வரும் கோடை விடுமுறைக்கு படம் வெளியாகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 25வது படத்திற்கும் 'பராசக்தி' தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படம் பற்றிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.