‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
நடிகர் விஜய்ஆண்டனி நடிக்கும் சக்தித்திருமகன் பட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பேசிய விஜய்ஆண்டனி, ''19 படங்களில் ஹீரோவாக, சில படங்களில் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறேன். அந்த வகையில் நடிப்பில் இது 25வது படம். அடுத்து வரிசையாக படங்கள் கைவசம் இருக்கின்றன.
சசி இயக்கத்தில் உருவாகும் 'நுாறுசாமி' படம் பெரிதாக பேசப்படும். தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறேன். இன்னும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறேன். ஆகவே, என் பட நிறுவனத்தை பப்ளிக் லிமிடட் கம்பெனியாக மாற்றப்போகிறேன். எனக்கு நடிப்பை விட, படம் இயக்க, இசையமைக்கவே ஆர்வம். நான் தயாரிக்க இருந்த படங்களில் மற்ற நடிகர்கள் நடிக்க முடியாத காரணத்தால் நான் நடிகர் ஆனேன்'' என்றார்.
'சக்தித்திருமகன்' படத்தை 'அருவி, வாழ்' படங்களின் இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். இந்த படம் குறித்து பேசிய விஜய்ஆண்டனி, ''இது சில அரசியல் விஷயங்களை நேரடியாக பேசுகிறது. நானே அவரை அழைத்து கதை கேட்டேன். பிற்பாதி கதை எனக்கு புரியவில்லை. பின்னர், அவர் விலாவரியாக விளக்கினார். அடுத்தும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப்போகிறேன்'' என்றார்.