'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான '96' படம் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக அந்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அந்த படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர் மலையாள திரையுலக சேர்ந்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. அதன்பிறகு சில படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது சமீபத்தில் வெளியான கார்த்தியின் 'மெய்யழகன்' படத்திலும் பின்னணி இசையால் கவனிக்க வைத்திருந்தார்.
கோவிந்த் வசந்தா கடந்த 2012ல் ரஞ்சனி அச்சுதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு யாழன் என பெயர் சூட்டியுள்ளனர். சமீபத்தில் கோவிந்த் வசந்தாவின் பிறந்தநாளன்று அவர் ஒரு பாட்டு பாடியவாறே தனது குழந்தையை அணைத்தபடி தூங்கவைக்கும் ஒரு வீடியோவை அவரது மனைவி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.