தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
கோடி ரூபாய் கொடுத்தாலும் சில விஷயங்களை செய்ய மாட்டேன் என்று ஒரு படத்தில் பிரபு கூறும் வசனம் இப்போதும் பிரபலமான மீம்ஸ் ஆக உலா வருகிறது. அதே பாணியில் 100 கோடி கொடுத்தாலும் பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று கூறியுள்ளார் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார். இத்தனைக்கும் இவர்கள் இருவரும் இணைந்து 1999ல் வெளியான ஹம் தில் தே சுக் சனம் மற்றும் 2022 ல் வெளியான தேவதாஸ் ஆகிய படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தனர். ஆனால் தேவதாஸ் படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. அதற்கு காரணம் என்ன என்று சமீபத்தில் மனம் திறந்துள்ளார் இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார்.
இது குறித்து அவர் கூறும்போது, “தேவதாஸ் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் ஆன போது சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தின் வெற்றிக்கு இஸ்மாயில் தர்பாரின் இசை முதுகெலும்பாக இருக்கிறது என்று சில பத்திரிகைகள் எழுதின. இது என்னை பற்றி நானே திட்டமிட்டு புகழ்ந்து எழுத வைத்ததாக கருதிய சஞ்சய் லீலா பன்சாலி என்னை அழைத்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டார். நான் இல்லை என மறுத்தேன். பிறகு அவரே சரி போகட்டும் விடுங்கள் என்று கூறினார். அப்போது இருந்து அவருடன் இணைந்து நான் பணியாற்ற விரும்பவில்லை. இப்போது சஞ்சய் லீலா பன்சாலி என்னிடம் வந்து 100 கோடி தருகிறேன் என் படத்தில் பணியாற்றுங்கள் என்று சொன்னால், உடனே இந்த இடத்தை விட்டு கிளம்புங்கள் என்று தான் சொல்வேன்” என கூறியுள்ளார்.
தமிழில் ஒரு முறை விக்ரமன் படங்களின் வெற்றிக்கு தன்னுடைய இசை மிகப்பெரிய தூணாக இருக்கிறது என்று அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் சொன்னதால், தொடர்ந்து அவருடன் பணியாற்றி வந்த இயக்குனர் விக்ரமன் உன்னை நினைத்து படத்தில் அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் சிற்பியை இசையமைக்க வைத்து வழக்கம்போல ஹிட் பாடல்களை கொடுத்ததாக அந்த சமயத்தில் பரபரப்பாக சொல்லப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.