தனுஷ் இயக்கும் படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா | 5 வருஷம் கழிச்சு ரொமான்டிக் படம் எடுப்பேன் : லோகேஷ் கனகராஜ் தகவல் | 20 ஆண்டுகளுக்குப் பின் காமெடி ஹாரர் படத்தில் இணையும் பிரபுதேவா - வடிவேலு | மகன்களின் கையால் ஊழியர்களுக்கு விஜயதசமி பரிசளித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | காப்பிரைட் பிரச்னை தீராமல் ரிலீஸ் செய்யக்கூடாது : மோகன்லால் பரோஸ் படம் மீது வழக்கு | நடிகையின் புகார் எதிரொலி : லப்பர் பந்து நாயகி மீது கேரள போலீசார் வழக்கு | விசாரணைக்கு ஒத்துழைக்க அடம்பிடிக்கும் நடிகர் சித்திக் : விரைவில் கைதாக வாய்ப்பு | பிரச்னையிலிருந்து வெளிவர பிசாசு நடிகைக்கு உதவிய வேட்டையன் வில்லன் நடிகர் | அந்தரங்க லீக் வீடியோவுக்கு தில்லாக பதில் அளித்த ஓவியா |
விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள 'தி கோட்' படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து 69வது படத்தில் நடிக்கும் விஜய் அப்படத்துடன் திரையுலகை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
அவரது 69வது படத்தை எச்.வினோத் தான் இயக்கப் போகிறார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வந்தன. ஆனால், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதனிடையே, நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் அது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் வினோத்.
“அப்படம் 200 சதவீதம் விஜய் படமாக இருக்கும். கமர்ஷியலாக எல்லாரும் பார்க்கிற படமா இருக்கும். இந்தப் படத்துக்கு நான் 'கமிட்' பண்ணும் போதே, ''என்னோட படத்தை எல்லா வயசுல இருக்கிற பசங்களும் பார்ப்பாங்க, எல்லா அரசியல் கட்சிகளும் பார்ப்பாங்க, எல்லாரும் பார்க்கிற படமா இருக்கணும்னு,' விஜய் சார் சொன்னாரு. ஒரு அரசியல் கட்சியையோ, ஒரு அரசியல்வாதியையோ தாக்குகிற படமா இல்லாம, ஒரு லைட்டான விஷயங்கள வச்சி, 100 சதவீதம் கமர்ஷியல் படமா இருக்கும்,” என்றார் வினோத்.
விஜய்யின் 69வது பட இயக்குனரே படம் குறித்து ஓபன் செய்துவிட்டதால் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'தி கோட்' பட வெளியீட்டிற்குப் பிறகு அவை ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகலாம்.