பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா சில வருடங்கள் காதலித்த பின் திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பின்னர் பிரிந்தார்கள். அதற்கடுத்து நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபல்லாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்தன. கடந்த வாரம்தான் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
அதற்கு சமந்தாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். இதனிடையே, நேற்று சமந்தா அவரது இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் மற்றும் பதிவில் இருந்த வார்த்தைகளுக்கு விதவிதமான கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
அவரது புகைப்படத்தில் அவருடைய டி ஷர்ட் வாசகம், 'The museum of peace & quiet” என இருக்கிறது. மேலும், அவரது வலது கை விரல்களில் நடுவிரலை தனது வலது கண் புருவத்திற்கு மேல் வைத்துக் கொண்டு 'போஸ்' கொடுத்திருக்கிறார். அந்த 'நடுவிரல்கள் யாரை நோக்கியோ காட்டுகிறது' என்றும், டிஷர்ட் வாசகங்கள் எதற்காக என்பது குறித்தும் பலவிதமான கமெண்ட்டுகளை ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். அவரது பதிவிற்கு 17 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.