மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிக்கும் படத்தில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு, அதேநேரம் அதே இடம், அட்டி, பகிரி, பெட்டிக்கடை, தமிழ் குடிமகன் படங்களை தயாரித்தவர்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் படமாகி வருகிறது. சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கண்டுபிடி கண்டுபிடி, ஐ.பி.சி.376 ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பாராமன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, "அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் தீயவர்களை தட்டிகேட்கும் கதைகள் ஆயிரம் வந்துள்ளது. ஆனால் இந்த கதை முற்றிலும் மாறுபட்டது; முழுவதும் வேறுபட்டது. அநியாயத்தை இவன் எதிர்கொள்வதே சிறப்பாக மட்டுமல்ல மக்களின் கைதட்டலோடு காட்சிகள் நகரும்.
திரில்லும், திகிலும் மட்டுமல்ல மிரட்டலும் சேர்ந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். மதுரை வட்டார வழக்கில் "நறுக்"கான வசனம் எழுதி இருக்கிறேன். சமுத்திரகனி கதையை நான்கு மணிநேரத்தில் படித்துவிட்டு பாராட்டினார். இப்படத்தை டிசம்பருக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.