பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகை தாண்டி தமிழில் அறிமுகமாகி பின்னர் அப்படியே படிப்படியாக தெலுங்கு, ஹிந்தி திரையுலகம் வரை சென்று விட்டார். குறிப்பாக தமிழை விட தெலுங்கு திரையுலக படைப்பாளிகளும் ரசிகர்களும் துல்கர் சல்மானுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து அவரை ஆராதித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவர் நடித்த 'சீதாராமம்' படம் அவரை தெலுங்கு ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக்கியது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. நான்கே நாட்களில் 55 கோடி வசூலித்து தற்போது அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. துல்கர் சல்மானை தெலுங்கில் முதன் முதலாக 'மகாநடி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் சமீபத்தில் வெளியான 'கல்கி' படத்தின் இயக்குனருமான நாக் அஸ்வினும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “நான் சென்னையில் இருந்த துல்கர் சல்மானிடம் 'மகாநடி' படத்தின் கதையை சொல்வதற்காக சென்றேன். ஆனால் அவர் கதையை கேட்கும் முன்பாகவே இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். காரணம் எனக்கு தெலுங்கு பேச வராது.. அதனால் தெலுங்கு படங்களில் நடிக்க முடியாது.. படம் பார்க்கும் ரசிகர்கள் என்னை கூர்மையாக கவனிப்பார்கள். இவனுக்கு தெலுங்கு பேசவே தெரியவில்லையே என்று சொல்லி விட மாட்டார்களா, என்று கூறினார்.
ஆனால் அவரை கன்வின்ஸ் செய்து அந்த படத்தில் நடிக்க வைத்தேன். இன்று ஆறு வருடங்களுக்குப் பிறகு, மூன்று பிளாக் பஸ்டர்கள் சேர்ந்த ஒரு ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு இதோ தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக ஒரு தெலுங்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு அவர் உயர்ந்துள்ளார். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு நன்றி” என்று துல்கர் சல்மானை மேடையில் வைத்துக் கொண்டே இந்த புதிய தகவலை வெளியிட்டார் இயக்குனர் நாக் அஸ்வின்.