ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனக்கு நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கும் படங்களாக தேர்ந்தெடுத்து தன்னை எப்போதுமே ரசிகர்களின் கவனத்தில் நிறுத்திக் கொள்பவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. இன்று அனைத்து முன்னணி ஹீரோக்களுமே நடிக்க ஆசைப்படுகின்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான 'மாநகரம்' படத்தின் கதாநாயகி. ஹீரோயின் ஆக மட்டுமல்லாமல் 'சக்ரா' போன்ற படங்களில் வில்லியாகவும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஒரு பக்கம் தற்போது 'விடாமுயற்சி'யில் அஜித்துடன் இணைந்து நடித்து வரும் ரெஜினா இன்னொரு பக்கம் ஹிந்தியிலும் 'ஜாட்' மற்றும் 'செக்சன் 108' ஆகிய படங்களில் நடிக்க வருகிறார். ஆனால் ஹிந்தியில் பட வாய்ப்புகளை பெறுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல என்றும் அங்கே கதாநாயகிகளை தேர்வு செய்யும் நடைமுறை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஹிந்தியில் பெரும்பாலும் படப்பிடிப்பிலேயே லைவ் ஆக வசனங்களை பதிவு செய்வதால் ஹிந்தி நன்கு பேச தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். நல்ல வேலையாக என்னுடைய அம்மா ஹிந்தி ஸ்கூலுக்கு அனுப்பி என்னை படிக்க வைத்தார். அதே சமயம் தென்னிந்திய படங்களில் மொழி ஒரு பிரச்னையே இல்லை. எந்த மொழியை சேர்ந்தவர் என்றாலும் நடிக்க வைத்து விட்டு டப்பிங்கில் சரி செய்து கொள்கிறார்கள்.
அதே சமயம் ஹிந்தியில் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள லைம் லைட்டிலேயே இருக்க வேண்டும் என்றால் ஒரு தனியார் புரமோட்டிங் ஏஜென்சி மூலமாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனக்கு தாமதமாகத் தான் தெரிந்தது. ஆனால் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக என்னையே விற்றுக்கொள்ளும் ஆள் நான் அல்ல” என்று கூறியுள்ளார்.