'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
புராண படங்களும், ஆன்மிக குருக்களின் வாழ்க்கை படங்களும் வந்து கொண்டிருந்த 1930களில் வந்த புரட்சிகரமான சமூக படம் 'தேச முன்னேற்றம்'. சுதந்திர போராட்டத்தையும், நாட்டில் அப்போது நிலவிய தீண்டாமை கொடுமையையும் ஒருங்கிணைத்து உருவான படம். மஹிந்திரா என்பவர் எழுதி இயக்கி இருந்தார். மூவிடோன் நிறுவனத்தின் சார்பில் சர்வோதம் பாதாமி தயாரித்த இந்த படத்தில் கர்நாடக இசைக் கலைஞரான மாத்திரிமங்கலம் நடேச ஐயர் முருகனாகவும், பேபி ருக்மணி அவரது எட்டு வயது மகள் மாதவியாகவும் நடித்தனர்.
இந்த படத்தில் பாபநாசம் சிவன் இசையில் ஏ.என்.கல்யாண சுந்தரம் எழுதிய 'ஜெய ஜெய வந்தே மாதரம்' பாடல் இடம் பெற்றது. இந்த பாடல் தேசிய கீதத்திற்கு முந்தைய தேச பக்தி பாடலாக பிரபலமானது. மகாத்மா காந்தி, நேரு, பாரதியார் போன்றவர்கள் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்ததையும் இந்த படம் காட்சிகளாக பதிவு செய்தது. ஆனால் இந்த படத்தின் பிரதிகள் எதுவும் தற்போது இல்லை. பாட்டு புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு சில புகைப்படங்களே தற்போது எஞ்சி உள்ளது.