ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
சூர்யா நடிப்பில் கடந்த 2021ல் வெளியான படம் ஜெய் பீம். இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல பெயர் காரணமாக அடுத்த படத்திலேயே ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படம் இயக்கும் வாய்ப்பை பெற்று அதையும் வெற்றி படமாக கொடுத்துவிட்டார். அதே சமயம் இவரது முதல் படம் ஜெய் பீம் திரைப்படம் கொரோனா இரண்டாவது அலை நிலவிய காலகட்டம் என்பதாலும் வேறு சில காரணங்களாலும் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதே சமயம் ஓடிடி தளத்தில் அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது மறுக்க முடியாத ஒன்று. அந்த படம் வெளியான இரண்டு நாட்களில் தான் அண்ணாத்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது.
அண்ணாத்த படம் பார்ப்பதற்காக சூர்யா ஒரு திரையரங்குக்கு சென்றிருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு வயதான மனிதர் ஜெய் பீம் படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என வெளியே விசாரித்துக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். அவரிடம் சென்று படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை ஓடிடியில் வெளியாகி இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். ஆனால் அந்த மனிதரோ ஓடிடி என்றால் என்ன என்று சூர்யாவிடம் திருப்பிக் கேட்க அப்போதுதான் அந்தப் படம் சென்று சேர வேண்டிய பார்வையாளர்களை சென்றடையாமலேயே போய்விட்டதே என்று வருந்திய சூர்யா, ஜெய் பீம் படத்தை ஓடிடியில் வெளியிட்டது மிகவும் தவறான முடிவு என்பதை உணர்ந்தாராம். விரைவில் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வெளியாக உள்ள நிலையில் அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் சூர்யா அதில் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை ஓபன் ஆகவே கூறியுள்ளார்.