'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். அவருடைய பெண் தோழியான நடிகை பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் ரேணுகாசுவாமி என்பவர் தொல்லை தந்ததாக கொலை செய்தார். இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையிலும் அவருக்கு சில வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு ஆறு வார கால ஜாமின் வழங்கியுள்ளது.
முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அவர் மனு செய்ததை அடுத்து இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் மாநில அரசும் அதற்கு பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.
மருத்துவ சிகிச்சை முடிந்த பின் அவர் உடனே சிறைக்குத் திரும்புவாரா அல்லது மேலும் சில வாரங்கள் நீட்டிப்பு கேட்பாரா என்பது அறுவை சிகிச்சை முடிந்த பிறகுதான் தெரியும்.