அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி! சோசியல் மீடியாவில் வெடித்த சலசலப்பு | 'கொலைக் கைதி' நடிகர் தர்ஷனுக்கு 6 வார ஜாமின் | ஷாலின் ஷோயா கட்டிய புது வீடு | சினிமாவுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு: சிவகார்த்திகேயன் | டிசம்பர் 4ல் நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணம்? | இயக்குனருடன் திருமணத்துக்கு தயாராகும் ரவீணா ரவி | மெஸன்ஜரில் 'பேஸ்புக்' பேய் | அம்பானி குழுமத்தில் இணைந்தார் நயன்தாரா | 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | 'ஏ' படத்தில் மட்டும் நான் நடிப்பதாக ரசிகர்கள் வருத்தம்: ஜெயம் ரவி |
துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்கிறார். அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் அஜித்துக்கு, துணை முதல்வரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், 'உலக அளவில் சிறப்புக்குரிய துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை அஜித்குமார் ரேசிங் யூனிட்டின் கார் ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி ஊக்குவித்துள்ள அஜித்துக்கு தமிழக விளையாட்டு துறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதோடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பார்முலா 4 சென்னை ரேசிங் ஸ்டீரிட் ஆகியவற்றை வாழ்த்திய அஜித்துக்கு எங்களது அன்பு நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழகத்தை உலக அரங்கில் ஒன்றிணைந்து செயல்படுவோம். போட்டியில் வென்று தமிழகத்திற்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துக்கள்,' என அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார் உதயநிதி.
அவரது இந்த பதிவு சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் அவரை எதிர்ப்பதற்காக அஜித்தை தனக்கு ஆதரவாக அழைக்கிறார் உதயநிதி. கார் பந்தயத்தில் கலந்து கொள்பவருக்கு நன்றி தெரிவிப்பவர் எதற்காக திராவிட மாடலை எல்லாம் கொண்டு வர வேண்டும். அஜித் ரசிகர்களின் ஆதரவு தேவை என்றால் அவரிடத்தில் நேரடியாக கேட்க வேண்டியதுதானே என்று பலரும் பலதரப்பட்ட கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.