விஜய் மாநாடு வெற்றி : தீபாவளி தினத்தில் ரசிகர்களை சந்தித்த பின் ரஜினி வாழ்த்து | அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி! சோசியல் மீடியாவில் வெடித்த சலசலப்பு | 'கொலைக் கைதி' நடிகர் தர்ஷனுக்கு 6 வார ஜாமின் | ஷாலின் ஷோயா கட்டிய புது வீடு | சினிமாவுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு: சிவகார்த்திகேயன் | டிசம்பர் 4ல் நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணம்? | இயக்குனருடன் திருமணத்துக்கு தயாராகும் ரவீணா ரவி | மெஸன்ஜரில் 'பேஸ்புக்' பேய் | அம்பானி குழுமத்தில் இணைந்தார் நயன்தாரா | 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதை நாயகியாக நடிக்கும் தேவயானி |
சென்னை : விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினி தெரிவித்தார்.
ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகைக்கும் சென்னையில் இருந்தால் தனது போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் ரசிகர்களை சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ரஜினி. இந்த தீபாவளிக்கும் தனது இல்லத்தின் முன்பு கூடிய ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள். மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகள். விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டில் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி என பதில் அளித்துவிட்டு நழுவி சென்றார் ரஜினி.