ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
விஜய் நடித்து வெளிவந்த படத்தின் கிளைமாக்சில் தன்னிடமிருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுக்கும்படியான காட்சி ஒன்று இருந்தது. சினிமாவை விட்டு விலகி விஜய் அரசியலில் பயணிக்கப் போவதை அடுத்து அவருடைய இடத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு சிவகார்த்திகேயனுக்குத்தான் இந்த இடம் என 'குறீயீடாக' அந்தக் காட்சி அமைந்ததா என பலரும் விமர்சித்தார்கள்.
'அமரன்' படத்தின் புரமோஷனுக்காக நேற்று கோவை சென்ற சிவகார்த்திகேயனிடம் அது குறித்து பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிவகார்த்திகேயன், “நான் அந்தக் காட்சிக்குள்ள எதுவுமே பார்க்கலை. சினிமாவுல நடந்த அழகான ஒரு நிகழ்வா பார்க்கிறேன். ஒரு சீனியர் ஆக்டர், அடுத்த அவங்க செட் ஆக்டரோட ஒரு ஸ்கிரீன் ஷேர் பண்ணாங்க. அது அழகா இருந்துச்சு, அதை மட்டும்தான் நான் பார்த்தேன். நான் சினிமாவுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு,” எனப் பேசி சமாளித்தார்.
விஜய் கடைசியாக அவரது 69வது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்குப் பின் அந்த இடத்திற்கு யார் வரப் போகிறது என்ற போட்டி இப்போதே ஆரம்பமாகிவிட்டது.