புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலா ஆகியோரது திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தை நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விதத்தில் நடத்த உள்ளதாகச் சொல்கிறார்கள். திருமணம் நடக்கும் இடம் உள்ளிட்டவரை விரைவில் வெளியாகலாம்.
சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா. சில வருடங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதற்கு சோபிதா மீது நாக சைதன்யா வைத்த காதல்தான் காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயமும் நடந்தது.
நாக சைதன்யா தற்போது 'தண்டேல்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து முடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சோபிதா நடிப்பாரா மாட்டாரா என்பது குறித்த தகவல் இப்போதைக்கு இல்லை.
சமந்தாவின் புகைப்படத்தை நீக்கிய நாக சைதன்யா
சோசியல் மீடியாவில் சமந்தாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கி இருந்த நாகசைதன்யா, ரேஸ் டிராக்கில் சமந்தாவுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்திருந்தார். ஆனால் அவர் சோபிதாவை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடந்துள்ளதால் சமந்தாவின் புகைப்படத்தை உங்களது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி விடுங்கள் என்று அவரிடம் சமந்தாவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். இந்நிலையில் சமந்தாவின் அந்த புகைப்படத்தை தற்போது டெலிட் செய்துள்ளார் நாகசதன்யா.