கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதன் முதல் கொள்கை விளக்க மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று (அக்.,27) நடந்தது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். கட்சியின் கொள்கைகளை விளக்கி விஜய் பேசினார்.
விஜயை பாராட்டியும் வாழ்த்தியும் பலரும் அறிக்கையும், பதிவும் வெளியிட்டுள்ளனர். ஆனால் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் இது குறித்து எதுவும் கருத்து கூறாமல் மவுனம் காத்து வருகிறார்கள். என்றாலும் சூர்யா, கார்த்தி, பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், சசிகுமார், பிரபு, சிபி, சாந்தனு, சதீஷ், அர்ஜுன் தாஸ், வசந்த் ரவி, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், நெல்சன், நடிகைகள் ரெஜினா தன்ஷிகா ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
விஜயின் அரசியல் எதிரியான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பதும் நெருங்கிய நண்பரான அஜித் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.